02.யார் இந்த தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் சமுதாயம்? Origen of tea plantation workers community
இலங்கை என்று நாம் நினைக்கும் போது மிகவும் பசுமையாகத் தோண்றுவது இந்த கண்டி நுவரேலியா மற்றும் பதுளை போன்றவனவாகும். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இவ் மலையகத்தைப் பார்வையிட பலர் வருகின்றனர். அந்தவகையில் இந்த மலையகத்திற்கு நிறைய தமிழர்கள் கடந்த 200 நூற்றாண்டுகளில் பயணம் செய்துள்ளனர். இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் இருந்தாலும் கூட இந்த மத்திய மலைநாட்டுப்பகுதியில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எவ்வாறு இந்தப்பிரதேசத்திற்கு வந்து தோட்டத்தொழிலாளர் சமூதாயமாக உருவாகினர் என்றால் இந்தியாவில் 1800 களில் பல்வேறு கால கட்டங்களில் பஞ்சம் நிலவியது இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் உலகின் பல நாடுகளுக்கு இந்தியத் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக (indentured Labour) கொண்டு செல்லப்பட்டனர். பிரித்தானிய காலணித்துவத்திற்கு தெரியாமலும் கூட பயணம் செய்தனர்.
இவ்வாறு தமிழகத்தில் (சேலம் திருச்சி நாமக்கல்மாவட்டம் மற்றும் தூத்துக்குடி திருநெல் வேலி கோயம்பத்தூர்) என்று பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் தொழில் செய்யச் சென்றனர். ஆரம்ப காலகட்டத்தில் மலையகப்பகுதிகளில் வேலைகள் இருக்கின்றது அங்கு புதிய வேலைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று இலங்கையில் இருந்து சென்ற சில தமிழ் மக்கள் கூறிய கருத்தை நம்பி இப் பயணத்தை மன்னார் தீவின் ஊடாக சென்று கண்டிக்கு கால்நடையாக நடை பாதை மூலம் சென்றனர். அங்கு சென்று மத்திய மலைநாட்டை அவர்கள் பார்த்த போது காட்டுப்பகுதியாக இருந்தது அத்தேடு வன விலங்குகளும் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் காணப்பட்டது.
1820 ஆம் காலகட்டம் என்பது வரலாற்றில் முக்கியமானதொன்றாகும் காரணம் இந்த காலகட்டத்திலேயேதான் நாம் விரும்பி அருந்தும் கோப்பி அதாவது கோப்பித்தோட்டம் என்பது விரைவாக இலங்கையில் வளர்ச்சி கண்டது. இக்காலகட்டத்தில் பிரித்தானிய அரசில் பல முதளீட்டாலர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் பல பகுதிகளைப் பெற்று குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அந்தப்பகுதிகளில் கோப்பித்தோட்டங்களை விரிவாக செயற்படுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு உள்ளுர் மக்கள் யாரும் அமையவில்லை காரணம் உள்ளுர் மக்கள் கரையோரங்களில் மீன் பிடித்தொழில் மற்றும் அவர்களின் பொருளாதாரத்திலும் எந்த வித குறைபாடும் காணப்படவில்லை ஆகையால் அவர்களுக்கு காடுகளை துப்பரவு செய்து கூலிகளாக தோட்ட வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் இந்திய ஒப்பந்தக் கூலிகளை வேலைக்கு அமர்த்தினர். இவ்வாறு வந்தவர்கள் முதலில் வந்து மாத்தளையில் குடியமர்ந்தனர். அங்கு தமது வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று சிறிய கல் ஒன்றை வைத்து மாரி அம்மன் கோவில் ஒன்றை அமைத்தனர். இன்றும் கூட நாம் பார்க்கலாம் நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மலையக பிரதேசங்களில் ஏராளமான மாரி அம்மன் கோவில்களை காணலாம். இவற்றில் மிகவும் பலமையான கோவில் என்றால் மாத்தளை மாரி அம்மன் கோவில் ஆகும்.
இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயம் அங்கு உள்ள காடுகளை அழித்து அவ் பிரதேசங்களை விவசாயத்திற்கு ஏற்ற ஒரு நிலமாக மாற்றி அமைத்தனர். இருந்தும் இவ்வாறு கூலிகளாக வேலை செய்யும் இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தின் வாழ்க்கை சாதாரணமான ஒரு வாழ்க்கையாக அமையவில்லை. கடினமான வாழ்க்கையாகவே காணப்பட்டது. இதன் பின் கோப்பித்தோட்டங்கள் அழிந்த பின் மீண்டும் இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தால் தேயிலைத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி கண்டது. இதன் போது சிலர் மீண்டும் தழிழகம் திரும்பினர். சிலர் திரும்பிச் செல்லாது மலையகத்திலேயே தங்கி தொடர்ந்து கூலிகளாக வேலை செய்தனர். இவர்கள் தான் இன்று இருக்கின்ற மலையகத் தமிழர்கள் ஆவார்கள். இவ் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் சமுதாயம் தான் இலங்கை நாட்டின் பொருளாதாரமான தேயிலையை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காரணமாக அமைகின்றனர். இந்தப் பணி இன்றும் தொடர்கிறது.
இவ்வாறு படிப்படியாக 200 ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டாளும் அவர்களின் குடியுரிமைப் பிரச்சினை கேள்விக்குறியாக உள்ளது. அதாவது நவம்பர் 15ம் திகதி 1948 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன் படி ஏறக்குறைய 7 இலட்சம் மலையகத் தமிழ் மக்கள் நாடற்றவர்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டனர். இச் சட்டம் தான் இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தவர் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இலங்கையும் நாடல்ல இந்தியாவும் நாடல்ல என்ற நிலை ஆகும். ஏன் இவ் சட்டம் இவ் சமுதாயத்தவருக்கு கொண்டு வரப்பட்டது என்றால் மலையகத்தில் வாழ்கின்ற ஒருவர் அங்கேயே பிறந்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு முன்பு இரண்டு மூதாதயோர் இங்கு பிறந்திருக்க வேண்டும் என்பதாகும்.
இதனால் மலையகத்தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தவர் இலங்கையில் இருந்தாலும் தனித்தீவில் உள்ள மக்கள் போலவே பார்க்கப்பட்டார்கள். அத்தோடு அவர்களது கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் எவ்வித பெரியளவான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இவ் சமுதாயத்தவர்கள் இலங்கைக்குறிய பிரயைகளாக மாறியும் கூட அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விரும்பத்தக்க வகையில் அமையவில்லை. உதாரணமாக அவர்களின் வீட்டு இடவசதிகள் சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றில் ஒரு நிறைவுத்தன்மை காணப்படவில்லை. இருப்பினும் அந்த மலையக தோட்டத்தொழிலாளர் சமுதாயத்திற்கான பிரத்தியோக கலைகள் வளர்ந்துள்ளது மக்கள் இலக்கியங்களைப் படைத்தனர் உலக ரீதியாக அவர்களின் தனித்துவத்தைக்காட்டும் வகையில் கூத்து நடனக்கலை என்பவற்றோடு பல பண்பாட்டு விழுமியங்களையும் வளர்த்துள்ளனர்.
No comments:
Post a Comment