03.இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தவர்களால் கோப்பி மற்றும் தேயிலைத்தோட்டமும் அவற்றின் உற்பத்தியும் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்று பார்க்கையில்

 

03.இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தவர்களால்  கோப்பி மற்றும் தேயிலைத்தோட்டமும் அவற்றின் உற்பத்தியும் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்று பார்க்கையில்

இவ் கோப்பித்தோட்ட வரலாற்றில் 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலணித்துவ அரசு கண்டி சிற்றரசர்களைத் தாக்கி மலையக விவசாயப்பகுதிகளை கைப்பற்றிக் கொண்டனர். பின் 1823 ஆம் ஆண்டு இலங்கையில் பயணங்களுக்காக சாலைகள் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே கோப்பி மலையகப் பகுதியில் ஜோர்ச் பேர்ட் என்பவரால் கெம்போலாவுக்கு அருகில் சின்னப்பிட்டியா மற்றும் வெல்ல வத்த பகுதிகளில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும்" எட்வெட் பான்ச்" கொடுத்த நிலத்திலேயே தொடங்கப்பட்டது. பின் 1828ம் ஆண்டு தென்இந்தியத் தொழிலாளர்கள் வருகை இருந்தது. ஏறக்குறைய 3000000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பகுதிகளில் 250 கோப்பித்தோட்டங்கள் செய்யப்பட்டன என்ற செய்தி நமக்கு இன்றும் கிடைக்கின்றன அப்படி என்றால் எவ்வளவு தமிழக மக்கள் மலையகம் வந்திருக்க வேண்டும் அவர்கள் எவ்வாறு சிரமப்பட்டு இவ் தோட்டங்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்று வியக்க வைக்கின்றது. 1840ம் ஆண்டில் கோப்பித்தோட்டங்கள் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டு பிரித்தானிய அரசுடைய (     ) கீழ் கொண்டுவரப்பட்டது. 1867 இல் கொழும்பு கண்டி ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1870 ஆண்டு காலத்தில் சிலோன் 1மில்லியன் அளவு கோப்பியை இவ் தோட்டத்தொழிலாளர் சமுதாயத்தின் உழைப்பின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

                           
                                                          Tea plantations workers community in upcountry 

பின் இலக்கம் 18 திருத்தச்சட்டத்தில் 7 இலட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர் 1949ம் ஆண்டு மேலும் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் விடயமாக நாடற்றோரை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை கேட்டது ஆனால் இந்தியா இதனை மறுத்தது. இது இவ் சமுதாயத்திற்கான ஒரு துரதிஷ்டவசமான ஒரு விடயமாக அமைந்தது. பின்பு நீண்ட காலம் 1948 இல் இருந்து 1964 வரை எந்த நாடும் உரித்தற்றவர்களாக வாழ்ந்தனர். இலங்கையைப் பொருத்தவரை தமிழ் மக்களை பாதிக்கக்கூடிய சட்டம் ஒன்றாக “ ஸ்ரீ மா ஒ பண்டாரநாயகாவின் சட்டமாக காணப்படுகின்றது. காரணம் நாடற்றவர்களாக இருந்த இந்தியத்தமிழர்கள் பத்துஇலட்சம் பேரின் குடியுரிமை பற்றிய ஒப்பந்தம் இது இவ் ஒப்பந்தத்தின் படி அப்போதைய இலங்கையின் பிரதமராக இருந்த ஸ்ரீ மா ஓ பண்டாரநாயகா அவர்களும் இந்தியப்பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் கையெழுத்து இட்ட இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஜந்து இலட்சத்து இருபத்தையாயிரம் பேர் இந்தியா ஏற்றுக்கொள்வது எனவும் மூன்று இலட்சம் பேர் இலங்கை குடியுரிமை வழங்குவது எனவும் மீதி ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் பேர் எந்த ஒரு நாடற்றவர்களாகவும் இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஆக்கப்பட்டனர். இவ் சட்ட திருத்தம் என்பது 1964ம் ஆண்டு வந்தாலும் 1967 முதல் இது அமுலாக்கம் செய்யப்பட்டது. 

மலையகத்தமிழர்கள் இவ்வாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பின் 2003ம் ஆண்டு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு இலங்கைப் பிரஜைகள் என்று உரிமை கொடுத்து தற்பொழுது ஓரளவிற்கு சுமூகமான நிலையில் உள்ளது என கூறலாம்.

 Status of female workers in Plantations - Mathavakala Mathavan

No comments:

Post a Comment

தேயிலைத்தோட்டத் தொழிலாளர் சமுதாயம் Tea plantation workers community in SRILANKA A. KOLINCE (2020/A/144)

    தேயிலைத்தோட்டத் தொழிலாளர் சமுதாயம்  Tea plantation workers community in Srilanka