தேயிலை என்பது உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளது அதுவும் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகமாக உள்ளது ஆனால் அவ்தேயிலைத்தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களின் அதாவது தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் சமுதாயத்தின் வாழ்க்கை நிலை அனைத்து விடயங்களிளும் பின்தங்கியுள்ளது.
தேயிலைத் தொழில் இலங்கையின் பொருளாதாரத்தின் அடித்தளங்களில் ஒன்றாக இருந்தாலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.தொழிலாளர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களின் மலைகள் வழியாக வெறுங்காலுடன் நடந்து பல மணி நேரம் தேயிலை இலைகளை பறிப்பார்கள். தினக்கூலி பெற தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 20Kg தேயிலை இலைகளை ஒரு நாளில் பறிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு முதல், "தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள்" தினசரி ஊதியத்தை 1,000 ருபாவாக உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.கோரிக்கை இறுதியாக ஜனவரி 2021 இல் பலனளித்தன தோட்டத்தொழிலாளர் அல்லது மலையக சமூதாயத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட பாராளுமண்றப் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தினசரி தேயிலை தொழிலாளர் ஊதியத்தை குறைந்தபட்சம் 1000ரூபா ஆக உயர்த்தினர்.
இந்த ஊதிய உயர்வு இருந்தபோதிலும் பெரும்பாலான தேயிலை தொழிலாளர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடுகிறார்கள். உதாரணமாக அவர்களின் தங்குமிட வசதி இட நெரிசல்கள் இதனால் இவர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. நோய் ஏற்பட்டால் வேலை செல்ல இயலாத நிலை வேலை செல்லா விட்டால் ஊதியம் கிடைக்காது. ஒரு நாள் வேலை செல்லா விட்டு ஊதியம் இல்லை என்றால் அவ் குடும்பத்திற்கான ஓரு நாள் பொருளாதாரம் பாதிக்கப்படும். இவர்களுக்கு நோய்கள் வியாதிகள் எதுகும் வந்தால் இவர்களுக்கு எந்த வித சலுகையும் கிடைக்கப்பெறுவது இல்லை. இதனால் இவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் தங்களது உடல் நிலையைக் கவணிக்காது தங்களது இயலாத உடல்நிலையோடு தங்களின் உடலை வருத்தி ஒரு நாள் ஊதியத்திற்காக தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்கு செல்வார்கள் இவர்களுக்கு இழைக்கப்படுகின்ற சமூக அநீதிகளில் இந்த விடயம் ஒரு சிறிய பகுதியாகும். இதற்கு அப்பாலும் இலங்கையைச் சேர்ந்த மக்களும் கூட இவ் சமுகத்தவரை வேற்று இன மக்கள் போன்று பார்க்கின்றனர். ஆனால் ஒன்றை மட்டும் நாம் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இவ் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களே தேயிலை ஏற்றுமதி மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்திற்கு முக்கிய முதல் பங்காளர்களாகக் காணப்படுகின்றனர்.
ஒரு குடும்பத்தில் தாய் என்பவர் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் அக்குடும்பத்தைக் கொண்டு நடத்த கிடைக்கும் ஊதியம் போதாததால் வீட்டில் குழந்தைகளை கல்விகற்பிப்பதற்கு அடிப்படை வசதி கூட இல்லாமையால் குழந்தைகளின் கல்வி இடையிலேயே பாதிக்கப்பட்டு வசதி குறைவு காரணமாக சிறுவர்களும் அதாவது வயதிற்கு வந்த பெண் பிள்ளைகள் கூட தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்கச் செல்லும் நிலை இன்றய தினங்களிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment