01.சமுதாயம் என்றால் என்ன ? what is community
சமுதாயம் என்பது குறித்தவொரு புவியியல் பிரதேசத்தில் வாழும் மக்கள் தமக்குள் காணப்படும் இயல்புகள், கலாசாரம், பண்பாடுகள் என்பனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த தன்மையைக்"homogeneous" கொண்டு இயங்குமாயின் அது சமுதாயம் " community" எனப்படும்.
தேயிலைத்தோட்டத் தொழிலாளர் சமுதாயம் என்பது மத்திய மலைநாட்டில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பி மற்றும் அதனைத் தொடர்ந்து தேயிலை போன்ற பயிர்களை குறைந்த ஊதியத்தில் பயிரிட்டு அத்தோட்டங்களை பராமரித்து கூலிகளாக வேலை செய்யும் ஒரு தொழிலாளர் சமுதாயமாகும். இவ் சமுதாயத்தவர்களுக்கிடையில் காணப்படுகின்ற ஒத்த தன்மைகளாக “இவர்கள் இந்திய வம்சாவழியைச்சேர்ந்த பிரிவினர், இவர்கள் ஒப்பந்தக் கூலிகளாகவே இலங்கைக்கு பிரித்தானியரால் கூட்டிக்கொண்டு வரப்பட்டவர்கள், தேயிலைத்தோட்டத்திலேயே இக்குழுக்கள் கூலிகளாக வேலை செய்கின்றனர், மற்றும் ஒரே தொகை ஊதியத்தைப் பெறுகின்றனர், அத்தோடு புவியியல் ரீதியாக ஒரே காலநிலையிலும் தரைத்தோற்றத்தில் மத்திய மலைநாட்டுப் பிரதேசத்திலேயே வசிக்கினறனர். இவ்வாறான ஒத்த தன்மையைக் கொண்ட விடயங்களைக் கொண்டிருப்பதனால் இவர்கள் ஒரு சமுதாயம் என்ற வரையரையில் காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment